முதல் டெஸ்டில் இருந்து ஜடேஜா நீக்கம்?

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கென்பராவில் நடைபெற்ற முதல் சர்வதேச இருபது 20 போட்டியில் விளையாடிய ஜடேஜாவுக்கு கால் தொடைப் பகுதியில் உபாதை ஏற்பட்டது.

முதல் டெஸ்டில் இருந்து ஜடேஜா நீக்கம்?

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உபாதைக்குள்ளாகியிருக்கும் இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளரான ரவீந்ர ஜடேஜா பங்கேற்கின்றமை கேள்விக்குறியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கென்பராவில் நடைபெற்ற முதல் சர்வதேச இருபது 20 போட்டியில் விளையாடிய ஜடேஜாவுக்கு கால் தொடைப் பகுதியில் உபாதை ஏற்பட்டது.

அத்துடன், மிச்செல் ஸ்டார்க் வீசிய வேகப்பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டை தாக்கியது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான அவர் அந்தப் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடவில்லை. அத்துடன், இருபது20 தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து விலகினார்.

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமாகவுள்ளதுடன், அந்தப் போட்டியில் ஜடேஜா இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளன.

ஐ.சி.சி விதிமுறை பிரகாரம் தலையில் பந்து பட்டால் குறித்த வீரருக்கு 7 முதல் 10 நாட்கள் ஓய்வளிக்கப்பட வேண்டும். அந்த வகையில் 11 ஆம் திகதி ஆரம்பமாகும் பயிற்சிப் போட்டியில் ஜடேஜாவினால் விளையாட முடியாது.

பயிற்சிப் போட்டியில் விளையாடாத காரணத்தால் அவர் திடீரென போட்டியில் களமிறங்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பெரும்பாலும் வாய்ப்பளிக்காது. எனவே, டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஜடேஜா பெயரிடப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.