இங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்'... சரியான பாயிண்ட்

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வைத்து 2-1 என்று வென்ற இந்திய அணி தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன

இங்கிலாந்தை யாரும் கண்டுக்காததே நல்லதுக்கு தான்'... சரியான பாயிண்ட்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணியை பெரிதாக எவரும் கண்டுகொள்ளாமல் இருப்பதே நல்லது என்று டேவிட் லாய்ட் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே வைத்து 2-1 என்று வென்ற இந்திய அணி தற்போது, சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெறுகின்றன

முதல் போட்டி வரும் 5ம் திகதி துவங்கவுள்ளது. இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஐஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தங்கள் இருப்பை நிரூபிக்க நெருப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஹர்திக் இன்று தனது பயிற்சியை தொடங்கினார்.

சென்னை ஸ்பின் டிராக் என்பதால், 2 ஃபாஸ்ட் மற்றும் 3 ஸ்பின் கொண்டு களமிறங்க இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், தலைசிறந்த வர்ணனையாளருமான டேவிட் லாய்ட் இங்கிலாந்தின் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியா மீது தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இங்கிலாந்தை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், அப்படி இருப்பது தான் நல்லது என்று நான் கூறுவேன்.

கிட்டத்தட்ட கேப்டனே இல்லாமல் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்தியதன் மூலம், உலகின் தலைசிறந்த அணி என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. 

அவர்களிடம் சரியான கலவையில் வீரர்கள் உள்ளனர். அருமையான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்கள் ஜடேஜாவை மிஸ் செய்வதாக அனைவரும் கூறுகின்றனர். ஆனால், ஸ்பின்னை பொறுத்தவரை அக்ஷர் படேல் மிகவும் திறமையான பவுலர்.

எனினும், என்னைப் பொறுத்தவரை இந்தியா 3-0 என்றோ அல்லது 4-0 என்றோ ஜெயிக்க வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளார்.